புதிய தலைமுறை ஊடகவியலாளர் விஜயன் மீதான போலீசின் அடக்குமுறையை கண்டிக்கிறது- மக்கள் அதிகாரக் கழகம் !

புதிய தலைமுறை ஊடகவியலாளர் விஜயன் மீதான போலீசின் அடக்குமுறையை கண்டிக்கிறது- மக்கள் அதிகாரக் கழகம் !

‎தமிழக வெற்றிக் கழக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டது மக்களிடத்தில்அம்பலமானவுடன் அதை மூடி மறைப்பதற்கு பல்வேறு வித்தைகளை காட்டிவருகிறது.

‎

‎ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் சபாநாயகருக்கு எதிரானதீர்மானத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக கூறப்படும்குற்றச்சாட்டில் 

ca71cb6a-cb85-4932-81b5-ad346ad1347e.webp

புதிய தலைமுறை ஊடகவியலாளர் விஜயன், நேற்றைய நாள்நள்ளிரவில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.

‎

‎நள்ளிரவில் விசாரணை என்பது சட்டவிரோதமான நடவடிக்கையாகும். எனினும் இன்றும் காலை மீண்டும் விஜயன் அழைக்கப்பட்டு தற்போது வரைஅவர் காவல் நிலையத்தில் இருந்து நள்ளிரவில் தான்விடுவிக்கப்பட்டுள்ளார்.

‎

‎தமிழக வெற்றிக்கழக அரசு தன்னுடைய தவறுகளை மூடி மறைக்கதொடர்ந்து பல்வேறு சதி புகார்களை உருவாக்கி அதன் மூலம் பலரை கைதுசெய்து தன் மீது கழிவிரக்கத்தை உருவாக்க வேண்டும் என்றுசெயல்படுவதை அறிய முடிகிறது.

‎

‎தனக்கு வேண்டாதவர்கள் மீது பல்வேறு வழக்குகளை போட்டு கைதுசெய்வதில் ஜெயலலிதாவை மிஞ்சக் கூடிய வகையில் விஜயின்செயல்பாடுகள் இருக்கின்றன.

‎

‎ஊடகவியலாளர் விஜயன் சட்ட விரோதமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுசட்டவிரோதமாக போலீசால் தடுத்து வைக்கப்பட்டதை   மக்கள் அதிகாரக்கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

‎

‎தோழமையுடன்

‎தோழர் சி. வெற்றிவேல் செழியன் ,

‎மாநில பொதுச் செயலாளர்,

‎மக்கள் அதிகாரக் கழகம்,

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy