கோவையில் அரிஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு

கோவையில் அரிஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு

கோவையில் அரிஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு

கோயம்புத்தூரில் அரிஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் கேப்பிட்டல் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட தலைமை அலுவலக திறப்பு விழா (16-9-2026) சிறப்பாக நடைபெற்றது.
மார்ட்டின் குழுமத் தலைவர் எஸ்.மார்ட்டின் மற்றும் லால்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் மார்ட்டின் குழும இயக்குநருமான லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோர், அரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டெய்சி ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் இது ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த திறப்பு விழாவைத் தொடர்ந்து, நிர்வாக இயக்குநர் டெய்சி ஆதவ் அர்ஜுனாவுக்கும் அரிஸ் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் லீமா ரோஸ் மார்ட்டின் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்த புதிய அலுவலகம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், புதிய வணிக வாய்ப்புகளுக்கும், எதிர்கால சாதனைகளுக்கும் ஒரு சிறப்பான தொடக்கமாக அமையட்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் நிறுவனத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy