வீரகனூர்ஶ்ரீ ராகவேந்திரா பள்ளியில் தன்னம்பிக்கை விழா நடைபெற்றது

வீரகனூர்ஶ்ரீ ராகவேந்திரா பள்ளியில் தன்னம்பிக்கை விழா நடைபெற்றது

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தன்னம்பிக்கை விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் முதுகலை ஆசிரியர் சத்தியவேல் வரவேற்புரையாற்றினார். பள்ளியின் தலைவர் திரு. லஷ்மிநாராயணன் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் செயலர் செல்வராஜ் மற்றும் பொருளாளர் பிரபா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

கல்வி ஆலோசகர் பழனிவேல், இயக்குநர் இராதாகிருஷ்ணன், ராஜேஸ்வரி மற்றும் பள்ளி இயக்குநர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள உள்ள மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கருத்துகள் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் எடுத்துரைக்கப்பட்டன.

பள்ளியின் முதல்வர் ஹேமலதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முனைவர் கவிதா ஜவஹர், சிறப்புப் பட்டிமன்றப் பேச்சாளராகப் பங்கேற்று, தன்னம்பிக்கை, வாழ்க்கை வரலாறு மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

மாணவர்கள் தங்களிடம் உள்ள தன்னம்பிக்கையை உறுதியாகக் கடைப்பிடித்து, எவ்வித பயமும் தயக்கமும் இன்றி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். கவனம் சிதறாமல் விடாமுயற்சியுடன் படித்து, பயமின்றி மகிழ்ச்சியுடன் தேர்வுகளை எதிர்கொண்டு, தங்களது இலட்சியத்தை அடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அம்மா, அப்பா, ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் துணையுடன் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்பதை எடுத்துரைத்தார். மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக அமைந்த இவ்விழா அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இறுதியாக, பள்ளியின் முதுகலை ஆசிரியர் திரு. ஆறுமுகம் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy