திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுவனப் புத்தாக்க சபை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, "கனவு காணுங்கள்" என்ற தலைப்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும், வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் ர. மோகன் வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலாளர் திரு. மா. சின்னதுரை தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கி. வெங்கடாசலம் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக நாமக்கல் என்.கே.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஒ. தீபா கலந்துகொண்டு, அப்துல் கலாம் அவர்களை போன்று மாணவர்களும் தன்னம்பிக்கை, ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் புதுமையான சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக நிறுவனப் புத்தாக்க சபையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. நளினி நன்றி கூறினார்.
இவ்விழாவை நிறுவன புத்தாக்க சபை தலைவர் முனைவர் செ. பிரேமா ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் அனைத்துத் துறைப்பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.