பட்டமளிப்பு விழாவில் ஆத்தூர் கோட்டாட்சியருக்கு அவமதிப்பா?

பட்டமளிப்பு விழாவில் ஆத்தூர் கோட்டாட்சியருக்கு அவமதிப்பா?

மேடையில் இடமின்றி கீழே அமர்ந்ததால் பரபரப்பு – பின்னர் அமைச்சர் தலையீட்டால் அனுமதி

 சேலம் மாவட்டம், ஆத்தூர் காட்டு கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆத்தூர் கோட்டாட்சியர் தமிழ்மணிக்கு மேடையில் இடம் ஒதுக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.

இவ்விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். அப்போது கோட்டாட்சியர் தமிழ்மணிக்கு மேடையில் இடமில்லை எனக் கூறப்பட்டதால், அவர் கீழே இருக்கையில் அமர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நிலைமையை உணர்ந்த அமைச்சர் தலையிட்டு, கோட்டாட்சியர் மேடையில் அமர அனுமதி வழங்கப்பட்டது.

அரசு விழாவில் அதிகாரிகளுக்கான நெறிமுறைகள் (புரோட்டோகால்) முறையாகப் பின்பற்றப்படாதது குறித்து மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy