மதுரை தொழிலதிபர் V.K.D. உதயகுமார் குடும்பத்தினர் சார்பில் ஸ்கந்தன் சூர்யாவுக்கு காதணி விழா!

மதுரை தொழிலதிபர் V.K.D. உதயகுமார் குடும்பத்தினர் சார்பில் ஸ்கந்தன் சூர்யாவுக்கு காதணி விழா!

மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து!

மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமத்தில் தொழிலதிபர் V.K.D. உதயகுமார் – அக்தஷா உதயகுமார் தம்பதியினரின் அன்புப் பேரனும், ஸ்வரூப் IAS – ரம்யாபாரதி IPS தம்பதியினரின் அன்பு மகனுமான S.R. ஸ்கந்தன் சூர்யாவுக்கு மதுரை மாடக்குளத்தில் அமைந்துள்ள இடாரி அய்யனார் குலதெய்வக் கோவிலில் காதணி விழா சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி ஸ்கந்தன் சூர்யாவுக்கு பாரம்பரிய முறைப்படி மொட்டை அடித்து, காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாகப் பங்கேற்று குழந்தையை வாழ்த்தினர்.

இந்த விழாவை முன்னிட்டு தொழிலதிபர் V.K.D. உதயகுமார் ஏற்பாட்டில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான முறையில் உணவு உபசரிப்பு செய்யப்பட்டிருந்தது.

பாரம்பரியத்தையும் குடும்ப உறவுகளின் மகிழ்ச்சியையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இவ்விழா, மாடக்குளம் பகுதியில் சிறப்பான கவனத்தைப் பெற்றது.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy