தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி
200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அரசு அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முள்ளக்காடு பஞ்சாயத்தை சார்ந்த பெரியோர்கள், ஊர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மக்களுக்கான பிரச்சினைகளை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.
புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சமூக போராளி மா மாரிச்செல்வம் இக்கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு, திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் இடத்தில் உள்ள பயணியர் நிழற்குடையை முந்தைய அரசு இடித்து விட்டதால் மக்கள் கடும் வெயிலிலும் மழைக் காலங்களிலும் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணம் செய்ய மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆதலால் ஏற்கனவே இருந்த பயணியர் நிழற்குடையை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பான முறையில் அமைத்து முள்ளக்காடு / பொட்டல் காடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் வாழக்கூடிய பொதுமக்கள் குறையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பயணியர் நிழற்குடை(bus stand) அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் இந்த கோரிக்கையை கிராமசபை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறினால் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்பதை அரசின் கவனத்திற்கு தெரிவித்தார்.
புரட்சி பாரதம் கட்சி சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொருளாளர் மு மணிகண்டன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட வணிகர் அணி செயலாளர் சுடலை மாடன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட உரிமை மீட்பு குழு அணி செயலாளர் கோ அருள் தாஸ், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமிதுரை ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டாரத்தில் கல்வித் துறையில் மோசடியில் ஈடுபட்டுள்ள அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.