கிருஷ்ணகிரி தனியார் மதுபான விடுதியில் கத்திக்குத்து : 4 பேர் கைது
கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள தனியார் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த வாலிபரைப் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.