சேலம் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் உயர சாலையோர வியாபாரிகள் விண்ணப்பங்கள் பதிய கடந்த மாதம் 15ம் தேதி முதல் 30ம் தேதி முடிய பதிவு செய்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யா நீலம் செய்திகுறிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் நான்கு மண்டலங்களிலும் வியாபரிகள் பதிவு செய்தனர். அதில் அஸ்தம்பட்டி மண்டலத்தில் பதிவு செய்யும் வியாபாரிகளிடம் ரூ150 பெற்றுக்கொண்டு வந்துள்ளனர் இப்பணத்தை பதிவுசெய்த இரண்டு பெண்ஊழியர் ஒரு ஆண் ஊழியர் பெற்றுக்ககொண்டனர். ரசீது கேட்டதற்கு அதிகாரிகளுக்கு தரவேண்டி உள்ளது என கூறியுள்ளனர். ஆகவே இதுகுறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.