மதுரை தொழிலதிபர் V.K.D. உதயகுமார் குடும்பத்தினர் சார்பில் ஸ்கந்தன் சூர்யாவுக்கு காதணி விழா!
மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து!
பாண்டியநாடு மக்கள் கட்சியின் நிறுவனர் முத்துராஜ் பாண்டியன் அவர்கள் தலைமையில் ஆட்சியரிடம் மனு
மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பாண்டியநாடு மக்கள் கட்சியின் நிறுவனர் முத்துராஜ் பாண்டியன் அவர்கள் தலைமையிலும், மாநில பொதுச் செயலாளர் மணி சேதுபதி, மதுரை மாவட்ட செயலாளர் செண்பகம், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அபிஷேக் மணி, அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் பிரவீன் ஆகியோர் முன்னிலையில் மனு ஒன்று வழங்கப்பட்டது, அம்மனுவில் கூறியுள்ளது யாதெனில், சங்ககால பாண்டியர்கள் இடைக்கால பாண்டியர்கள் பிற்கால பாண்டியர்கள் என்று பாண்டிய மன்னர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள், அவர்கள் ஆண்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழுக்கு சங்கம் வைத்து தமிழைப் போற்றி வளர்த்து இருக்கிறார்கள், சங்க கால பாண்டியரான நெடியோன் பாண்டியன் அவர் காலத்தில் தான் தொல்காப்பியம் அரங்கேற்றியதாக கருதப்படுகிறது, இன்னொரு முக்கியமான பாண்டியரான நெடுஞ்செழியன் அவர்கள் களப்பிரர்களை விரட்டி அடித்து மீண்டும் பாண்டிய சாம்ராஜ்யத்தை நிறுவியவர் ஆவார், இடைக்கால பாண்டியர்களில் ஒருவரான கடுங்கோன் பாண்டியன் கருதப்படுகிறார், கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்ட சீர் நெடுமாறன் இவர் திருஞானசம்பந்தரின் வழிகாட்டுதல் படி சமண மதத்தை துறந்து சைவ சமயத்திற்கு மாறி தமிழுக்கு நிறைய பணிகளை ஆற்றி இருக்கிறார், பிற்கால பாண்டியர்களாக மறவர்மன் குலசேகர பாண்டியன், முதலாம் மறவர்மன் சுந்தரபாண்டியன் போன்றோர் பாண்டிய மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், இப்படிப்பட்ட வீரம் செறிந்த தமிழுக்கு தொண்டு செய்த ஆட்சி நிர்வாகத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்த பாண்டியர்களின் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், நாணயங்கள், போர் தளவாடங்கள், அவர்கள் பயன்படுத்திய வாள்கள், தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் போன்றவற்றைக் கொண்டு பாண்டியர்களுக்கான அருங்காட்சியகத்தை மதுரை மாநகரில் அமைக்க வேண்டும், அந்த அருங்காட்சியக வளாகத்தில் மதுரையை மீட்ட மறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு 100 அடி உயரத்தில் சிலை அமைக்க வேண்டும் மற்றும் ஈரோடு சேர்ந்த பெரியாருக்கு மதுரையில் சிலை உள்ளது, பிற மாநிலங்களைச் சேர்ந்த ஜெயலலிதா, எம்ஜிஆர், கருணாநிதி போன்றவர்கள் பெயர்களை சாலைக்கு வைத்துள்ளனர், அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு மதுரையை ஆண்ட பாண்டியர்கள் பெயர்களை வைக்க வேண்டும் என்று பாண்டிய நாடு மக்கள் கட்சியை சார்பாக கோரிக்கை வைக்கிறோம் இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது,
Publisher
மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து!
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.