சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேட்டியில் கூறியதாவது தமிழக வெற்றி கழகம் தலித் மக்களின் நம்பிக்கைக்குறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறது .
சேலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் பேட்டி:
பகுஜன் சமாஜ் கட்சியின் மேற்கு மண்டலம் சார்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்சிராம் அவர்களின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் மாநில செயலாளர்
செ.க சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவு ஒன்றும் புதிதல்ல எனவும் evm மிஷின்களை மாற்றி பழைய ஓட்டு முறையை கொண்டு வர வேண்டும் அப்போதுதான் ஜனநாயக ரீதியான வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் பாஜகவின் சூழ்ச்சியால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு தங்களுக்கு தேவையான வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது தொடர்ந்து வாடிக்கையாக உள்ளது என கருத்து தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழக ஆட்சியில் தலித் மக்கள் மீதான பார்வை சிறப்பாக உள்ளது தமிழகத்திற்கு 8 அமைச்சர்களை அந்த கட்சியில் வழங்கி உள்ளார்கள் எனவும் சமூக மக்கள் சிலர் மட்டுமே தலித் மக்களை இழிவு படுத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தமிழக வெற்றி கழக அரசு இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திமுக ஆட்சியில் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்திர விடக்கூடாது என்பதற்காக எங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்கள்.
தற்போது தமிழக வெற்றி கழகம் அதற்கு ஆதரவு அளித்து வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
தலித் மக்கள் மீதான இப்போ பார்வையை மாற்ற இந்தியா முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சி தங்களின் மகத்தான பணியை செய்து வருவதாகவும் குறிப்பாக தமிழகத்தில் தலித் மக்களை இணைப்பதில் மண்டலம் வாரியாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் வரும் காலத்தில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை எனவும் தெரிவித்தவர் தலித் மக்களை ஒன்றிணைப்பதில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியார்ன்பன் மற்றும் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சக்கரவர்த்தி
ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தம்பி கீனோஸ் ஆர்ம்ஸ்ட்ராங் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் சேலம் மத்திய மாவட்ட துணை செயலாளர் நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் வார்டு பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் கிளைக் கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்டு 500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.