சேலம் மாவட்டத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்.

சேலம் மாவட்டத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்.

தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் பவர் ட்ரஸ்ட் தொண்டு நிறுவனம் இணைந்து சர்வதேச பெண் குழந்தைகள் தினம் பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடினர்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்துவரும் பவர் டிரஸ்ட் நிறுவனமானது தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவுடன் இணைந்து கல்வராயன் மலை பகுடுபட்டு அரசு உண்டு உறவிட உயர்நிலைப்பள்ளி, தேக்கம்பட்டு அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி,  கல்வராயன் மலை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி,  கரிய கோயில் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில்  குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் கவிதா அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பொன்முடி, ஆசிரியர் சம்சாத் பேகம் தலைமை தாங்கினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர் ஜெகதாம்பாள், மனித உரிமை கல்வி நிறுவன அமைப்பாளர் ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.

6103c220-a25e-465a-bfc2-4ede9301ac8c.webp

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் இணையத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இயங்க வேண்டிய வழிமுறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பாலின சமத்துவம் ஒன்றே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்தும் என்றும் இள வயது திருமணத்தை தடுத்து நிறுத்தவும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பள்ளியில் பாலின சமத்துவத்தை குறித்து குழந்தைகளுக்கு பாடம் நடத்தவும், பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு நடத்தவும், சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ள சமூக கல்வியை கற்பிக்கவும், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வளர்க்கக்கூடிய கலைகளை பயிற்றுவிக்கவும் வேண்டுமென வலியுறுத்தினர்.

என் உடல் ; என் உரிமை என்ற முழக்கத்தோடு குழந்தைகளாகிய நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்றும், பெற்றோரை ஆசிரியரை மதிப்போம் என்றும்,  குழந்தைகளுக்கான பாதுகாப்பு எண் 1098 பயன்படுத்துவோம் என்றும் எவ்வித வன்முறை செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்றும் குழந்தைகள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி நிர்வாகத்தினரும் பவர் டிரஸ்ட் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy