பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் அரிவாளுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது- இருசக்கர வாகனம் பறிமுதல்.

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் அரிவாளுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது- இருசக்கர வாகனம் பறிமுதல்.

திண்டுக்கல், பழனிரோடு, முத்தனம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் அரிவாளை சுற்றிக்கொண்டே வாலிபர்கள் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் மேற்பார்வையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மாங்கரையை சேர்ந்த மாரியப்பன் மகன் கோகுல்குமார்(24), முருகன் மகன் துளசி(25) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy