தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி
200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டாரத்தில் கல்வித் துறையில் மோசடியில் ஈடுபட்டுள்ள அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டக் கிளை சார்பில், கருங்குளம் வட்டாரக் கல்வி அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையிலுள்ள தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரக் கல்வி அலுவலராக பணிபுரிந்துவரும் சொ முத்துக்குமார் என்பவர் கல்வித் துறைக்கு சொந்தமான அரசு நிதியைக் கையாடல் செய்துள்ளார் என்றும், இவரது நடவடிக்கையால் நல்ல முறையில் இயங்கிவந்த ஆறாம்பண்ணை நடுநிலைப்பள்ளியை மூடியது தவறு என்றும்,
வருமான வரி தாக்கல் செய்ய ஆசிரியர்களிடம் இலட்சக் கணக்கில் பணம் வாங்கினார் என்றும், ஆசிரியங்களின் பணபலன்களுக்காக குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையிலும் இலஞ்சம் கேட்கிறார் என்றும், பெண்ணாசிரியர்களிடம் கண்ணியக் குறைவாகவே நடக்கிறார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் ஆசிரியர்கள் முன்வைத்தனர்.

மேலும் மேற்குறிப்பிட்ட குற்றச் செயல்களுக்காக அவரை பணியிடை நீக்கம் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் அண்டனி சார்லஸ், கோவில்பட்டி கல்விமாவட்ட செயலாளர் புனித அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி கல்விமாவட்ட செயலாளர் எபனேசர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் முத்தையா வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் கலை உடையார் கருங்குளம் வட்டாரச் செயலாளர் லூயிஸ் பூபால ராயன் ஆர்ப்பாட்ட உரை ஆற்றினர். மாநிலச் செயலாளர் ராஜ்குமார் ஆர்ப்பாட்டப் பேருரை நிகழ்த்தினார். மாவட்டப் பொருளாளர் ஜெயசீலி நன்றியுரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களில் இருந்தும் நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.