மதுராந்தகம் தனி சட்ட மன்ற இடைத்தேர்தல் விசில் சின்னத்தில்போட்டியிடும் மரகதம் குமரவேலுவை ஆதரித்து TUPF தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பினர் மதுராந்தகம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்கள் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு ரூபாய் 3000 உயர்த்தி வழங்கவும் இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்தவும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனித் துறை உருவாக்கவும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கையை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். எனவே தவெக கட்சியின் சாதனைகள் குறித்து மக்களுக்கு விளக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


இந்நிகழ்வின் போது நிறுவனத் தலைவர் ஆர். டி.பழனி மாநிலத் தலை ஆ.கதிர்வேல் மாநில கெளரவ தலைவர் வி.ஜெ.குமார் கே.ஆர்.சீனிவாசன் பொதுச்செயலாளர் மாநில பொருளாளர் கே செல்வம் கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.