வாலாஜாபாத் ஸ்ரீ வெள்ளேரி அம்மன் ஆலய 113 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா

வாலாஜாபாத் ஸ்ரீ வெள்ளேரி அம்மன் ஆலய 113 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா

காமாட்சி தவக்கோலத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட ஸ்ரீ வெள்ளேரியம்மன்  ஆலய நவராத்திரி 113 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 11ந்தேதி துவங்கியது. நாள்தோறும் வெவ்வேறு தவக்கோளங்களில் அம்மன் காட்சியளித்த நிலையில் நேற்று மாலை அருள்மிகு தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் ஆலய வாணிபர் சங்கம் சார்பில் காமாட்சி தவக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் 
நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.

அருள்மிகு தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் ஆலய அறங்காவலர் எம்.ஜெயபிரகாஷ், செயலாளர் ஏ.மணி, துணைத்தலைவர் கண்ணன், பொருளாளர் சுரேஷ், ஆலய நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி சீனிவாசன், முனுசாமி, பார்த்திபன் ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்பாக விழா நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பாலாறு லயன் சங்கம் மற்றும் பல சரக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் லைன்ஸ் சங்கத் தலைவர் சி.கலைமணி தலைமையில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy