காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுரவு மைய கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி தி.சினேகா அவர்கள் சிறப்பாக பணியாற்றிய வருவாய் ஆய்வாளர் பிரதீப் அவர்களுக்கு கோப்பை மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.திவ்யஸ்ரீ,சார் ஆட்சியர் தி.புவனேஷ் ராம்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது ர.ரங்கநாதன், தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ர.விஜயலட்சுமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நில எடுப்பு டி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.