திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமா, சந்திராபுரம் சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
பிரசார தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம், காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் முன்னாள் மாவட்டத் தலைவர் தென்னரசு, காங்கேயம் முன்னாள் வேட்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சத்தியபாமா தலைமையில் நடைபெற்ற பிரசாரம் பொன்னாபுரம், கோவிந்தாபுரம், சத்திரம் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்றது. கிராமங்கள் தோறும் வேட்பாளர் சத்தியபாமாவுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் 100 நாள் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இந்த தேர்தல் பிரசாரத்தில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வேட்பாளர் சத்தியபாமா, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து, தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் தனது முதல் கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தினார்.