திருப்பூர் மாவட்டம் மதுவிலக்கு காவல் துறை அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு..

திருப்பூர் மாவட்டம் மதுவிலக்கு காவல் துறை அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு..

தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தேர்தல் பறக்கும் படையும் காவல்துறையினரும் இணைந்து பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை ஈடுபட்ட வந்த வேளையில்,  மதுவிலக்கு காவல் ஆய்வாளர்  உதயச்சந்திரன்யிடம் கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தாராபுரம் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் துரை பாபு தலைமையில் தலைமை காவலர்கள் ஜெய்கணேஷ், முகமது ரஃபி, பிரசாந்த், கவிதா, ஆகியோருடன் தாராபுரம் டூ பொள்ளாச்சி செல்லும் ரோடு சாமி ஹோட்டல் எதிரே சந்தேக படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சோதனை செய்தபோது அவரிடம் மூன்று கிலோ கஞ்சா இருந்தது கஞ்சாவின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆகும். மேற்படி நபரை கைது செய்து திருப்பூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டது. தொடர்ந்து மதுவிலக்கு காவல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டு பல்வேறு இடங்களில் நடக்கும் சட்ட விரோத செயலில் ஈடுபடு நபர்களை தொடர்ந்து கைது செய்து வருவதால் தாராபுரம் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டு வருகின்றனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy