கிருஷ்ணகிரியில் ராகுல்காந்தி மற்றும் பிரியங்காகாந்தியையும் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் ராகுல்காந்தி மற்றும் பிரியங்காகாந்தியையும் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனாநாயத்தை காப்பாற்ற போராடிய மாநிலங்கவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்காகாந்தியையும் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - இதில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின்  வாக்கு திருட்டுக்கு எதிராக ஜனநாயகமுறையில் போராடிய மாநிலங்கவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்காகாந்தியையும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. 
கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரகு தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினார் ஏகம்பவாணன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பி.சி.சேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தின் வயிலாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தில் உள்ள
குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை  வழியுறுத்தி அமைதியான முறைப்படி பேராடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்   ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து  உரை நிகழ்த்த பட்டது. மேலும் மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக கண்டன கோசங்கள் எழுப்பினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, ராஜாகுமாரவேல், நாராயணமூர்த்தி, நகர தலைவர் லலித் ஆண்டனி, சேலம் ரயில்வே கோட்ட உறுப்பினர் ரகமத்துல்லா, நகர் மன்ற உறுப்பினர் வினாயகம், மாவட்ட மகளிர் அணி தலைவர் உமாசங்கரி, மாவட்ட கலைப்பிரிவு தலைவர் தீபாராணி, காங்கிரஸ் கட்சியின்  எஸ்,சி, எஸ்.டி பிரிவு மாநில செயலாளர் ஆறுமுக சுப்ரமணி வட்டாரத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், அப்சல், நஞ்சுண்டன் மாவட்ட செயலாளர் சத்திவேல், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ராமசந்திரன்,
நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy