கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டத்தில் கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டத்தில் கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

தலைமைக் கழகப் பிரதிநிதிகளுக்கு மாவட்டச் செயலாளர் தே. மதியழகன் சால்வை அணிவித்து வரவேற்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிகளில் கழக மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதையொட்டி, கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தலைமைக் கழகப் பிரதிநிதிகளுக்கு மரியாதை நிமித்தமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்  கிருஷ்ணசாமி, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப. ராணி ஆகியோருக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

கழக மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் கழக அமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிகழ்வின்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy