கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, மாவட்ட முதன்மை நீதிபதி லதா பேட்டிங் செய்து துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி,  மாவட்ட முதன்மை நீதிபதி லதா பேட்டிங் செய்து துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்கம் சார்பில், இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில், முதல் முறையாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தினர். இப்போட்டிகளை முதன்மை மாவட்ட நீதிபதி லதா, பேட்டிங் செய்து துவக்கி வைத்தார். 3 நாட்கள் நடந்த இப்போட்டியில், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளம் வழக்கறிஞர்கள் ஒன்பது அணிகளாக பிரிந்து, கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றனர். மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்தராஜுலு தலைமை வகித்தார். வழக்கறிஞர் கருணாகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, த.வெ.க., எம்.எல்.ஏ., முகுந்தன், டி.என்.சி., சிட்ஸ் சேர்மன் இளங்கோவன், கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜசிம்மவர்மன், சிறப்பு சார்பு நீதிபதி பத்மநாபன், மாவட்ட முன்சீப் நீதிபதி சுந்தரமூர்த்தி, குற்றவியல் நீதிபதி தேவராஜ், ஓசூர் வழக்கறிஞர் சங்க தலைவர் சிவசங்கர், ஓசூர் வழக்கறிஞர் சங்க செயலாளர் கதிரவன், போச்சம்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், லீக் போட்டிகள் 8 ஓவராகவம், இறுதிப் போட்டிகள் 10 ஓவராகவும் நடத்தப்பட்டது. மூன்றாவது நாளில் நடந்த இறுதிப் போட்டியில், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அணிகள் மோதின. இதில், ஓசூர் வழக்கறிஞர் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. கிருஷ்ணகிரி வழக்கறிஞர் அணி இரண்டாம் இடம் பெற்றது. முதலிடம் பெற்ற அணிகளுக்கு பார்கவுன்சில் முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் யுவராஜ் கோப்பை, மெடல், சான்று மற்றும் ரொக்கப்பரிசை வழங்கினார்.  
விழா ஏற்பாடுகளை மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணி, துணை தலைவர் முருகன், துணை செயலாளர் அழகு நிலா ஆகியோர் செய்திருந்தனர். வழக்கறிஞர் சங்க செயலாளர் கோகுல கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy